Cooking Tips : கொண்டைக்கடலையை ஊற வைக்க டைம் இல்லையா? அப்போ இதை செய்யுங்க!
உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது தண்ணீரில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்தால் உருளைக்கிழங்கு சீக்கிரமாக வெந்துவிடும், தோலையும் எளிதில் உரித்துவிடலாம்.
தயிர் ரொம்ப நேரம் புளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கண்ணாடி பாத்திரத்தில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைக்க வேண்டும். எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது.
சுண்டல் அல்லது கொண்டக்கடலையை ஊற வைக்க நேரம் இல்லையென்றால், நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் சுண்டலை ஊற வைத்தால் அவை நன்றாக ஊறிவிடும்.
இட்லி மென்மையாக வருவதற்கு 2 கப் மாவிற்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து இட்லி சுட வேண்டும்.
பால் காய்ச்சும் போது பொங்கிவிடாமல் இருக்க உப்பு சேர்க்காத வெண்ணையை பால் காய்ச்சும் பாத்திரத்தின் வாய் பகுதியில் தடவ வேண்டும்
பொங்கல் செய்யும் போது சிறிதளவு டால்டாவை சேர்த்தால் பொங்கல் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.