Cooking Tips : மழைக்காலத்திற்கேற்ற சூடான சுவையான சூப்.. இப்படி செய்து பாருங்க!
தனுஷ்யா | 15 Jul 2024 03:27 PM (IST)
1
சூப்போடு முட்டை சேர்ப்பதாக இருந்தால், அடுப்பின் தீயை குறைத்து முட்டையை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி அடித்துக்கொள்ள வேண்டும். கொதிக்கும் சூப்பில் பொறுமையாக இந்த முட்டை கலவையை சேர்த்தால், சூப் பார்க்க வித்தியாசமாக இருக்கும்
2
பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய், சிறிதளவு பெருங்காயத்தூள், கல் உப்பு சேர்த்து பருப்பு பொடி செய்தால் அருமையாக இருக்கும்.
3
கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய் மூடியில் விபூதி வாசம் போக, அதை நன்கு கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
4
தக்காளி, வெங்காயம் சட்னி செய்யும் போது சிறிது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து சேர்த்தால் சட்னி சுவை வித்தியாசமாக இருக்கும்
5
சேனைக்கிழங்கு நறுக்கும் போது கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டால், கையில் அரிப்பு ஏற்படாது