Cooking Tips : இந்த டிப்ஸை பின்பற்றினால் ஐஸ்கிரீம் அவ்வளவு எளிதில் உடனே கரையாது!
மிளகாய் வத்தலை வறுக்கும் முன் அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வறுத்தால் நெடி வராது
துவரும் பருப்பு வேக வைக்கும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு முழுவதும் ஊசி போகாமல் இருக்கும்.
ஐஸ்கிரீம் பரிமாறும் கிண்ணங்களை ப்ரீசரில் 5 நிமிடங்கள் வைத்துவிட்டு பின்னர் ஐஸ்க்ரீம் நிரப்பிக் கொடுத்தால் நீண்ட நேரம் உருகாமல் இருக்கும்.
மிக்சருக்கு அவல், கடலைப்பருப்பு, கார்ன் ஃப்ளேக்ஸை நேரடியாக எண்ணெயில் பொரித்தால் கருகும். அகலமான குழியுள்ள ஒரு சில்வர் சல்லடை வடிகட்டியில் போட்டு வடிகட்டியை அப்படியே சூடான எண்ணெயில் முக்கிப் பொரித்தால் கருகாமல் இருக்கும்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை தழையை வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும்
ஆம்லெட் செய்கையில் வெங்காயத்தோடு 2 ஸ்பூன் தக்காளி சாறையும் சேர்த்து கலக்கி ஆம்லெட் போட்டால் சுவையாக இருக்கும், நீச்ச வாடையும் வராது