Cooking Tips : வெங்காயம் சீக்கிரமாக வதங்க செம டிப்ஸ் இதோ!
அனுஷ் ச | 11 Jun 2024 10:56 AM (IST)
1
பூரி எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு, பூரி பொரிக்கும் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கல் உப்பை சேர்க்க வேண்டும்.
2
முட்டை வேக வைக்கும் தண்ணீரில் கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சிறிதளவு சேர்த்து முட்டையை வேகவைத்தால் ஓடு எளிதாக வந்துவிடும்.
3
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிதளவு பால், எண்ணெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.
4
தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
5
காய்கறி பொறியல் செய்யும் போது எண்ணெய் அதிகமாகிவிட்டால் சிறிதளவு கொள்ளு மாவை தூவி வதக்கினால் எண்ணெய் உறிஞ்சப்படும்
6
வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்தால், அது சீக்கிரமாக வதங்கிவிடும்