Chicken Vadai : சுவையான சிக்கன் மசாலா வடை..இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்: சிக்கன் - 300 கிராம், கடலை பருப்பு - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2 , இஞ்சி - 1 துண்டு, சோம்பு - 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் வெந்தவுடன் ஆற வைத்து எலும்புகளை நீக்கிக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை சின்ன சின்னதாக கையில் உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது,1 1/2 மணி நேரம் ஊறிய கடலை பருப்பு, உதிர்த்த சிக்கன் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் கடலை பருப்பை சேர்த்து வடையாக தட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயை எண்ணெயை ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
அதில் தட்டி வைத்த வடையை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் வடை ரெடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -