Chicken Manchurian: ருசியான சிக்கன் மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்க; ரெசிபி இதோ!
சிக்கன் மஞ்சூரியன் செய்வதற்கு 400 அல்லது 500 இராம் சிக்கன், எலும்பு இல்லாத சிக்கன், முட்டிஅ, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, சோள மாவு, வெங்காயம், குடை மிளகாய் இதெல்லாம் இருந்தால் போதுமானது. க்ரேவி தனியாக மஞ்சூரியன் தனியாக பொரித்து எடுத்தால் தயாராகிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும். அதில் மிளகு தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு சோள மாவு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இது நன்றாக ஊறியதும் அடுப்பில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக காய்ந்ததும் சிக்கன் பொட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது க்ரேவிக்கு வெங்காயம், குடைமிளகாய், கேரட் உள்ளிட்டவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டி பேஸ்ட் தயாரித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், கேரட், குடைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெங்காயத்தளை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.
இதோடு, வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு சேர்த்து வதக்க வேண்டும். சோள மாவு கரைத்து அந்த தண்ணீரை அதோடு சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்தால் சிக்கன் மஞ்சூரியன் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -