Skin Care Tips: முகப்பரு நீங்க சூப்பர் ஃபேஸ் மாஸ்க் இருக்கு; இதோ எப்படி செய்வது?
பல்வேறு காரணங்களால் முகப்பரு ஏற்படுவது இயல்பு, சிலருக்கு மரபு ரீதியிலாக முகருப்பரு ஏற்படாது. ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் முகப்பரு ஏற்படாமல் தடுக்கும். அப்படி, முருப்பரு ஏற்பட்டால் அதை எப்படி சரி செய்வது என்று காரணலாம்.
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம். பதின்பருவத்தை எட்டும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செபாக்ஸ் சுரப்பியில் இருந்து முகத்திற்கு எண்ணெய் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் சுரப்பி விரிவடைந்து முகப்பரு ஏற்படுகிறது என்கிறனர் மருத்துவர்கள் . இதற்கு தீர்வாக இயற்க்கையான மாஸ்க் செய்து போடலாம். அதோடு, உணவில் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட கூடாது. உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
முகப்பரு ஏற்பட்டால் அதற்கு தீர்வாக வேப்பிலை, மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு மாஸ்க் தயாரிக்கலாம்.
வேப்பிலை, மஞ்சள், சந்தன பொடி, ரோஸ் வாட்டர் இவற்றை நன்றாக கலந்து முகத்தில் பரு இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். வேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடியாக செய்து வைத்துகொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றில் உள்ள ஆண்டி பாக்ட்ரீயல் தன்மை முகப்பருவில் உள்ள தொற்று கிருமிகளை நீக்கி அதை சரி செய்யும். தழும்பு ஏற்படமால் தடுக்கும். உங்களுக்கு முகப்பரு ஏற்பட்டால் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீரை குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.