Chicken Kothu Parotta : சிக்கன் கொத்து பரோட்டாவை இப்படி செய்யுங்க.. மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்!
தேவையான பொருட்கள்: உதிர்த்த சிக்கன் துண்டுகள், கோழி கிரேவி, உதிர்த்த பரோட்டா, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, வெங்காயம் - 2 , பூண்டு - 5 , பச்சை மிளகாய் - 2 , கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, தக்காளி - 2 , உப்பு, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு - 1/2 தேக்கரண்டி, முட்டை - 2
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய், வெங்காயம்,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நேரம் மாறியதும் தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்தது இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மசாலாவோடு வதக்கவும்.
அடுத்தது வேக வைத்த சிக்கனை உதிர்த்து வைத்துக்கொள்ளவும், அதன் பின் சிக்கனை மசாலாவோடு சேர்த்து கிளறவும். அடுத்தது உதிர்த்த பரோட்டாக்களை சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது கோழி குழம்பை சேர்த்து பரோட்டாவோடு 5 நிமிடம் கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லி இலை இறக்கினால் ருசியான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.