Prawn Thokku : சுவையான செட்டிநாடு இறால் தொக்கு செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் : இறால் - 1 கிலோ, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி, சோம்பு - 2 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு - 2 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/4 கப் , சீரக தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை , மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து கலந்து விடவும். கடுகு பொறிந்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வதக்கவும்.
அடுத்தது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
மசாலா கலவையில் இறாலை சேர்த்து கலந்து விடவும். சீரக தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேகவைக்கவும்.அதன் பிறகு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
அடுத்தது மிளகு தூள்,கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு. நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -