Paal Kolukattai : என்னங்க பெரிய ரசகுல்லா.. பால் கொழுக்கட்டை தெரியுமா? இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : கொழுக்கட்டை மாவு - 1/2 கப், உப்பு , நெய் - 1 தேக்கரண்டி, வெல்லம் - 200 கிராம், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, தேங்காய் பால் - 1 1/2 கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் வெல்லம் பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு வெல்லம் பாகை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இடியாப்பம் மாவு, தேவையான அளவு உப்பு, நெய் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அதன் பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் பால் ஊற்றி கொதித்ததும் , உருட்டிய கொழுக்கட்டை மாவை சேர்த்து 15 நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அடுத்தது தேங்காய் பாலில் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி விடவும். அதன்பிறகு வெல்லம் பாகு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வெல்லம் பாகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -