Cheesy Stuffed Potato:குழந்தைகளின் ஃபேவரைட் ஸ்நாக் - ஸ்டப்டு உருளைக்கிழங்கு ரெசிபி இதோ!
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நான்கு பெரிய உருளைக்கிழங்கை வேக வைக்கவும் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉருளைக்கிழங்கு வெந்தவுடன் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து ஆற விடவும். உருளைக்கிழங்கை ,நடுவில் செங்குத்தாக வெட்டி, அடர்த்தியான விளிம்புகளை வைக்கவும், நடுப்பகுதியை அகற்றி ஒதுக்கி வைக்கவும்.
இந்த நடுப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக மசிக்கவும். இதில் வெண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகு தூள் மற்றும் சில்லி பிளேக்ஸ், சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை மிகவும் கடினமாக இருந்தால், மூன்று மேசைக்கரண்டி சூடான நீரை ஊற்றி கலக்கவும். தயாரித்த உருளைக்கிழங்கு கலவையை ஒரு கரண்டியால் எடுத்து நடுப்பகுதி எடுத்த உருளைக்கிழங்கில் போட்டு சமமாக வைக்கவும். கலவையின் மேல் நீங்கள் விரும்பும் அளவுக்கு சீஸ் துருவிக்கொள்ளவும்.
இப்போது ஒரு பேனில் வெண்ணெய் போட்டு, அதை முழுவதும் பேனில் பரவசெய்து ஸ்டப்டு உருளைக்கிழங்கை போட்டு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து, ஒரு மூடி போட்டு சீஸ் உருகும் வரை வைக்கவும். அருமையான சீஸி உருளைக்கிழங்கு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -