Cheese Fried Rice : என்னது ப்ரைட் ரைஸில் சீஸா? செய்து பாருங்க வித்தியாசமாக இருக்கும்!
சீஸ் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் : பாஸ்மதி ரைஸ் - 1 கப், ப்ரோசஸ்டு சீஸ் - 100 கிராம் , பூண்டு - 6 பற்கள் நறுக்கியது, வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, குடைமிளகாய் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, பீன்ஸ் - 4 நறுக்கியது சோளம் - 1/2 கப் வேகவைத்தது, பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது, வெங்காயத்தாள், வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள்
செய்முறை : கடாயில் தண்ணீரை சூடாக்கி, உப்பு மற்றும் பாஸ்மதி அரிசியை வேகவைக்கவும். வெந்தபின், சாதத்தை வடிகட்டி எடுத்துவைக்கவும்.
அகலமான பேனில், எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் வேகவைத்த சோளம் மற்றும் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கிளறவும். அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
பின் இதில் சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறவும். அடுத்தது வடித்த சாதத்தை சேர்த்து மெதுவாக கிண்டவும்.
இறுதியாக சீஸ் துண்டுகள் மற்றும் வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறி, அடுப்பை அணைக்கவும். சுவையான சீஸ் ப்ரைட் ரைஸ் தயார்.