Chapati Making Tips : ஒன்னு இல்லனா இன்னொன்னு..சப்பாத்தி சாப்டாக வர இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

டிப்ஸ் 1: சப்பாத்தி சாப்டாக வருவதற்கு, மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
டிப்ஸ் 2: சப்பாத்தி மாவு பிசையும் போது ரொம்ப கடினமாக இருந்தால் சிறுதளவு வாழைப்பழம் சேர்த்து மாவு பிசையலாம். இப்படி செய்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும்.

டிப்ஸ் 3: சப்பாத்தி மாவு பிசையும் போது தண்ணீருடன் சிறிதளவு இளநீர் சேர்த்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.
டிப்ஸ் 4: கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் சோயா பீன்ஸயும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
டிப்ஸ் 5: சப்பாத்தி மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு பால் ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 6: சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்தால், சப்பாத்தி சாப்டாகவும் சுவையாகவும் இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -