Cauliflower Paratha : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் காலிஃபிளவர் பராத்தா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 3 கப், உப்பு - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, தண்ணீர், காலிஃபிளவர் - 1 துருவியது, வெங்காயம் - 1 நறுக்கியது , பூண்டு - 1 மேசைக்கரண்டி , இஞ்சி - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி , சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை : பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் காலிஃபிளவர், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
அதன் பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின்பு நன்கு ஆறவிடவும்.
அடுத்தது காலிஃபிளவர் மசாலாவை சப்பாத்தி மாவின் நடுவில் வைத்து சப்பாத்தி தேய்த்து தோசை கல்லில் இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் சுட்டு எடுத்தால் சுவையான காலிஃபிளவர் பராத்தா தயார்.