Ice Cream : கடையில் விற்கும் ஐஸ்கிரீமில் இது சேர்க்கப்படுகிறதா? தெரிஞ்சா சாப்பிட மாட்டீங்க!
பலருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். பால் ஐஸ், சேமியா ஐஸ், குச்சி ஐஸ் காலம் கடந்து செல்ல, கசாட்டா காலம் வந்துவிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுல்ஃபி, சாக்கோ பார், ஆரஞ்சு குச்சி ஐஸ் என விதவிதமாக ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆலைகளில் தயாராகும் பதப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீமில் பாலை விட பெரும்பாலும் பனை எண்ணெய் (Palm oil) பயன்படுத்தப்படுகிறது.
இந்த பனை எண்ணெய் சிலருக்கு ஒவ்வாது. அதில் அதிகளவில் கொழுப்பு நிறைந்துள்ளது. அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை கூடும், கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.
அந்த ஐஸ்கிரீம் அட்டையில் “ப்ரோசன் டெசர்ட்” (Frozen Dessert) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பேக் செய்யப்பட்ட கவரிலோ அட்டையிலோ ஐஸ்கிரீம் என்ற வார்த்தையே இடம்பெற்று இருக்காது.
அதனால் கடையில் ஐஸ்கிரீம் வாங்கும் முன்னர், அட்டையின் பின்புறத்தை ஒரு முறை பார்க்கவும். அதில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஐஸ்கிரீம் பார்லரில் ப்ரெஷ்ஷாக கிடைக்கும் ஐஸ்கிரீமை சாப்பிடலாம். உங்கள் வீட்டிலே ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -