Cauliflower Pakoda : பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும் குழந்தைகளுக்கு இந்த காலிஃபிளவர் பக்கோடாவை செய்து கொடுங்க!
தேவையான பொருட்கள்: காலிஃபிளவர், கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1/2 கப், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் - 2 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 , கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தண்ணீர், சமையல் சோடா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு காலிஃபிளவரை சின்ன சின்னதாக நறுக்கி சூடான தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், கரம் மசாலா தூள், பெருங்காய தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு விழுது, நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தது வடிகட்டி வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவில் காலிஃபிளவரை பிசையும் போது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். காலிஃபிளவர் மசாலாவை ஒரு 15 நிமிடத்திற்கு ஊறவிடவும்.
அடுத்தது ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் காலிஃபிளவரை பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் பக்கோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -