Cashew Rice: எளிதான செய்முறை; லன்ச் பாக்ஸ் ரெசிபி! சுவையா முந்திரி ரைஸ் இதோ!
பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், நெய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரிசியை முக்கால் பாகம் வேகவைக்கவும். பின்பு அதை வடிகட்டி தனியாக வைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் அரைக்கவும். மசாலா பால் கலவைக்கு, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
ஒரு தவாவை சூடாக்கி அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் வேகவைத்த பாஸ்மதி அரிசியை போடவும்.
அதை சமமாக பரப்பி மசாலா பால் கலவை, வறுத்த முந்திரி மற்றும் வறுத்த வெங்காயம் சேர்க்கவும். அடுத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவைக்கவும். சுவையான முந்திரி சாதம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -