Carrot Rice : கேரட் சாதத்தை இப்படி செய்து பாருங்க.. அசத்தலாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : கேரட் - 1 கப் துருவியது, பாஸ்மதி அரிசி - 200 கிராம் வேகவைத்தது, வெங்காயம் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி, சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, நெய் - 1 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு, கொத்தமல்லி இலை, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 2, கறிவேப்பிலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது துருவிய கேரட்டைச் சேர்த்து நங்கு வதக்கவும் . அதன் பின் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
கேரட் வெந்ததும், வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து சாதம் உடையாமல் கிளறிவிடவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான கேரட் சாதம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -