Carrot Laddu : கேரட்டிலும் லட்டு செய்யலாமா? என்ன சொல்றீங்க?
தேவையான பொருட்கள் : தேவையான பொருட்கள்: நெய் - 2 மேசைக்கரண்டி , முந்திரி பருப்பு , திராட்சை, ரவா - 2 மேசைக்கரண்டி , கேரட் - 500 கிராம் , தேங்காய் - 1/2 கப் , சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் நெய் ஊற்றி சூடானதும், ரவை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன்பின் துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
அடுத்தது துருவிய தேங்காய் சேர்த்து கேரட்டுடன் நன்கு கிளறிவிடவும். மீண்டும் நெய் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
5 நிமிடத்திற்கு பிறகு சக்கரை சேர்த்து கிளறிவிடவும்.அதன்பின் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராச்சை சேர்த்து கிளறி விட்டு ஆற விடவும்.
கேரட் ஆறியதும் அதனை உருண்டையாக பிடித்தால் சுவையான கேரட் லட்டு தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -