Carrot Halwa: சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது? ரெசிபி இதோ!
தீபாவளி சமயத்தில் ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தால்..கேரட் அல்வா செய்து அசத்துங்க.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேரட் அல்வா சுவையாக இருக்க வேண்டும் என்றால் தரமாக கேரட்களை தேர்வு செய்ய வேண்டும். நல்ல ஆரஞ்சு நிற கேரட்களை அல்வாவிற்கு தேர்ந்தெடுக்கவும். கேரட் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டும்.அப்போதுதான் அல்வா சுவையாக இருக்கும்.
என்னென்ன தேவை? கேரட் - 1 கிலோ பால் - 1 1/2 லிட்டர் நெய் - 1 கப் சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் - 4 ( பொடி செய்தது. ) உலர் பழங்கள் - தேவையான அளவு முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம்.
கேரட்டை நன்றாக கழுவி, தோல் நீக்கவும். கேரட்டை சிறிதாக கேரட் சீவுவதில் சீவி எடுக்கவும். ஒரு கடாயில், நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதனுடன், சீவிய கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதி இருக்கும் நெய் சேர்த்து அடி பிடிக்காமல் வதக்கவும்.
இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கேரட் நெய்யில் வேக வேண்டும். இதனுடன் பால் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். கேரட் மென்மையாக மாறியதும் அதனுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றை 5 -7 நிமிடங்களுக்குப் பிறகு கேரட் அல்வா தயாராகிவிடும். கேரட் அல்வா உடன் குங்குமப்பூ சேர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -