Diwali 2024:தீபாவளி பண்டிகை வந்தாச்சு..இனிப்பு, முறுக்கு சிறப்பாக செய்ய சில டிப்ஸ் இதோ!
எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் இனிப்பு துாக்கலாக இருக்கும். கேசரி செய்யும் போது. மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபோளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
தீபாவளி பண்டிகைக்கு, வித்தியாசமான, ஆனால், சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்யலாம். ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனுடன் சிறிது மிளகாய் துாள். பெருங்காயத்துாள், பட்ச தேவையான அளவு உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சுவை அருமையாக இருக்கும்.
பக்கோடா தயாரிக்கும் முன், பேசனில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களால் நன்றாக நுரைக்க தேய்க்கவும். அதன்பின், கடலைமாவு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை. கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டால், பக்கோடா கரகரப்பாக இருக்கும்.
'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் தயார். ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -