Cabbage Pakoda : மழை நேரத்திற்கு ஏற்ற சூப்பர் ஸ்நாக்ஸ்.. இந்த முட்டைகோஸ் பக்கோடாவை இன்றே ட்ரை பண்ணிங்க!
தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் - 250 கிராம், உப்பு தேவையான அளவு, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி, அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , சோள மாவு - 1 மேசைக்கரண்டி, கடலை மாவு - 1 1/2 கப், முந்திரி பருப்பு - 100 கிராம் , பச்சை மிளகாய், எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் முட்டைகோஸை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனோடு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் முட்டைகோஸ் கலவையை சூடான எண்ணெயில் தூவிவிடவும். ஒரு இடத்தில் தூவி விடாமல் நாலா புறமும் முட்டைகோஸை பரப்பி விடவும்.
முட்டைகோஸ் பக்கோடா பொன்னிறமாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, அதில் வறுத்து வைத்த முந்திரி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையோடு கலந்து பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் பக்கோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -