Butter Garlic Mushroom: தோசைக்கு நல்ல காம்பினேசன் பட்டர் கார்லிக் மஷ்ரும்; ரெசிபி!
Reishi, shiitake ஆகிய காளான் வகைகளில் பீட்டா குளுகன்ஸ் நிறைந்துள்ளது. இது குடலில் உள்ள மைக்ரோபையோம் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. செரிமான மணடலம் முதல் நோய் எதிர்ப்பு மண்டலம் வரை சீராக செயல்பட உதவும். சில வகையான காளான் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காளான் மூளைகளில் புதிய செல்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இதனால் நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாளானை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் வெண்ணெயை சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இதோடு பொடியாக நறுக்கிய பூண்டு, சுத்தம் செய்த காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். மிதமான தீயில் மட்டும் இதை செய்ய வேண்டும். காளான் நன்றாக வேக வேண்டும். 5-7 நிமிடங்கள் வெந்துவிடும்.
பிறகு, உப்பு, பொடித்த மிளகு, நறுக்கிய கொத்தமல்லி இலை, வெங்காய தாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். சுவையான பட்டர் கார்லிக் மஷ்ரும் தயார். இதை பிரெட், சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு சாப்பிடலாம்.
LDL கொழுப்பை குறைக்கவும் காளான் உதவும். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். காளானில் உள்ள polysaccharides இன்சுலில்ன் சென்சிட்டிவிட்டியை அதிகரிப்பதுடன் இரத்ததில் குளூகோஸ் அளவை சீராக வைக்க உதவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -