Bun Parotta : பன் பரோட்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம்!
தேவையான பொருட்கள்: மைதா - 2 கப் , உப்பு , சர்க்கரை - 1 தேக்கரண்டி, முட்டை - 1 , பால் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் .
கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்த்து மாவை விரலால் சூற்றி வைக்கவும். அதே போல் அனைத்து உருண்டைகளையும் சுற்றி வைக்கவும்.
அடுத்தது தோசை கல்லில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பரோட்டாவை இருபுறமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்த பரோட்டாவை அடித்து பிளேட்டில் பரிமாறினால் சுவையான பன் பரோட்டா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -