Brownie Cake : சுவையான எக்லெஸ் ப்ரௌனி கேக்.. உங்களுக்காக ரெசிபி இதோ!
தேவையான பொருட்களை: டார்க் சாக்லேட் - 1 கப் 200 கிராம், உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் , மைதா - 3/4 கப், கோகோ பவுடர் - 1/3 கப் , பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி , உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 3/4 கப் , வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி , கெட்டி தயிர் - 3/4 கப், சாக்லேட் சிப்ஸ் , வால்நட்ஸ், பட்டர் பேப்பர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் உருகும் வரை கிளறி விடவும்.
அதன்பின் சாக்லேட்டை இறக்கி விட்டு அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தது கெட்டியான தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பிறகு சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை , சாக்லேட் கலவையில் சேர்த்து 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
ஒரு நீட்டமான டிரேவை எடுத்து அதில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி பரப்பி விடவும். அடுத்தது ஓவனில் 180 டிகிரியில் சூடு செய்து பிறகு, 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
பேக் செய்த கேக்கை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சாப்பிட பரிமாறினால் சுவையான எக்லெஸ் ப்ரெளனி கேக் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -