Brinjal Rasam : அசத்தலான ஆந்திர கத்திரிக்காய் ரசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, வெல்லம் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை , புளி சாறு, தண்ணீர், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் கத்தரிக்காயை அடுப்பில் சுட்டு தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
அடுத்தது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, வெல்லம் சேர்த்து கையால் பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது புளி கலந்த தண்ணீரை சேர்த்து கையால் கலந்து விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
தாளிப்பை கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -