Bread Rava Kesari : ரவா கேசரியில் பிரட் சேருங்க.. சுவை வேற மாதிரி இருக்கும்!
தேவையான பொருட்கள்: பிரட் - 5 துண்டுகள், ரவை - 1/2 கப், தண்ணீர் - 3 கப், சர்க்கரை - 1 1/2 கப், பால், கேசரி பொடி, நெய் - 3 மேசைக்கரண்டி, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, நெய், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் பிரட் துண்டுகளை சின்ன சின்ன நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு கடாயில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் பிரட் தூளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ரவை சேர்த்து வேகவைக்கவும். ரவை வெந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின் பிரட் தூளை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அதன்பிறகு பாலில் கேசரி பொடியை மிக்ஸ் செய்து ரவையுடன் சேர்க்கவும்.
அடுத்தது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால் சுவையான பிரட் ரவை கேசரி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -