Bread Potato Cutlet : சுவையான பிரட் உருளைக்கிழங்கு கட்லெட்.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், உருளைக்கிழங்கு - 3 வேகவைத்தது, கேரட் - 1 துருவியது, பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, நெய்
தேவையான பொருட்கள்: ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்.
அதன்பிறகு உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள்,மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிரட் துண்டுகளை ஒரு மீடியமான அளவில் வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பிரட் துண்டு நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலாவை தட்டி கொள்ளவும்.
அடுத்தது தவாவை நெய் தடிவி சூடானதும் கட்லெட்டுகளை மிதமான தீயில் ரோஸ்ட் செய்யவும்.
கட்லெட் மீது சிறிது நெய் தடவி மறுபுறம் திருப்பி பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்து பிளேட்டில் பரிமாறினால் சுவையான பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.