Blood Boosting Foods : உடலில் இரத்த சோகை பிரச்சினையை போக்க உதவும் உணவுகள்!
கருப்பு திராட்சையில் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில், திராட்சையையும், அந்த தண்ணீரையும் மிக்ஸிசியில் அரைத்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாதுளை பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்லாமல் ஏராளமான வைட்டமின்ஸ் மட்டும் மினரல்ஸ் அடங்கியுள்ளது. மாதுளை சாப்பிட நினைத்தால் விதையுள்ள நாட்டு மாதுளையை தேர்வு செய்யவும். தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையை குறைக்கலாம்.
காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை பொரியலாகவும், சாறாகவும் குடிக்கலாம். உடலில் இரத்த சோகையை குறைத்து புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்ய உதவலாம்.
மட்டன் லிவரில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் B12 உள்ளது. இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு ஈரல் மட்டும் தான். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் 50 கிராம் ஈரலை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரை வகைளில் எல்லா வகை கீரையும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் முருங்கை கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனோடு முருங்கை காயையும் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தியை அதிகரிக்கலாம்.
பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்ஸ் மட்டும் மினரல்ஸ் அடங்கியுள்ளது. பேரிச்சம்பழத்தை சிற்றுண்டியாக இடைவேளை நேரத்தில் சாப்பிடலாம். இது இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -