Black Grape Jam:குழந்தைகளுக்கு பிடித்த கருப்பு திராட்சை ஜாம் - ரெசிபி இதோ!
கருப்பு திராட்சையை மிக்ஸ்சியில் சேர்த்து ஜூஸ் செய்துகொள்ள வேண்டும். ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிதை இல்லாமல், திராட்சையை ஒரு பானில் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். திராட்சை சிறிது வெந்ததும், அதில் வடிகட்டிய திராட்சை ஜூஸை சேர்க்கவும்.
கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை சேர்த்து வேகும் போது சர்க்கரையில் உள்ள அழுக்கை நீக்க அதை வடிகட்டி, திராட்சை ஜூஸ் மற்றும் திராட்சை துண்டுகளை தனியே வைக்கவும்.
வடிகட்டிய திராட்சை ஜூஸை மீண்டும் பானில் ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து வெந்த திராட்சை துண்டுகளை நன்கு கழுவி மீண்டும் பானில் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து பாதி எலுமிச்சைபழச்சாறு சேர்த்து, அனைத்தயும் நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம், சிரப் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஆறியவுடன் ஜாம் பதத்திற்கு வந்துவிடும். கருப்பு திராட்சை ஜாமை ஒரு பாட்டிலில் மாற்றி, பிரிட்ஜில் வைக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -