Aval Upma : வேர்க்கடலை மணமணக்க அவல் உப்புமா.. நொடிப்பொழுதில் சுலபமாக செய்துவிடலாம்
தேவையான பொருட்கள் : அவல் - 250 மி.லி, வேர்க்கடலை - 1/2 கப் , தேவையான அளவு எண்ணெய் , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , சிவப்பு மிளகாய் - 3 , வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அவலை தண்ணீரில் கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து கடுகு பொரியும் வரை வதக்கவும். அதனோடு வரமிளகாயை சேர்த்து வதக்கவும்.
அடுத்தது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். அதன்பின் இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்தது அந்த கலவையில் கழுவி வைத்த அவலை சேர்த்து கிளறிவிட்டு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அடுத்தது வறுத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளவிடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடலாம். கொத்தமல்லி தலை தூவி பிளேட்டில் பரிமாறினால் சுவையான அவல் உப்மா தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -