Peanut Podi:பொடி தோசை ப்ரியரா? வேர்க்கடலை பயன்படுத்தி பொடி செய்து அசத்துங்க!
Peanut Podi: ஆரோக்கியமான வேர்க்கடலைப் பொடி செய்வது எப்படி என்று காணலாம்.
Continues below advertisement

வேர்க்கடலைப் பொடி
Continues below advertisement
1/4

வேர்க்கடலை- 250 கிராம், கடலைப்பருப்பு -4 மேசைக்கரண்டி, உளுந்தம் பருப்பு -2 மேசைக்கரண்டி, தனியா -5 மேசைக்கரண்டி, சீரகம் -2 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் -15, புளி -சிறிதளவு, பெருங்காயத் தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு-தேவையான அளவு
2/4
வேர்க்கடலையை தோல் நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்கு சிவக்க வறுக்கவும்.
3/4
அடுப்பை அணைத்து, பெருங்காயத் தூள்,உப்பு சேர்த்து கலந்து ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில், வறுத்த கலவையை சேர்த்து பொடியாக அரைக்கவும். பின்பு அதனுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைக்கவும்.
4/4
சுவையான வேர்க்கடலைப் பொடி தயார். வேர்க் கடலையை சேர்த்த பின் நீண்ட நேரம் அரைக்கக் கூடாது. வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் பிரிந்து விடும். இந்த வேர்க்கடலைப் பொடியை சாதம்,இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். வேர்க் கடலையில் நார்ச்சத்து, வைட்டமின் டி, கால்சியம், போலிக் ஆசிட், ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந் திருப்பதால், இது சத்துமிக்கது.
Published at : 16 Nov 2024 05:56 PM (IST)