Anaemia: இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் லிஸ்ட் இதோ!
ஈரல் : அசைவ உணவான ஈரலில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. ஆட்டு ஈரல், கோழி ஈரல், மாட்டு ஈரல் என எந்த வகையான ஈரலையும் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் ஈரலில் 9 மில்லிகிராம் இருப்புசத்து உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபீன்ஸ் வகைகள் : சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ்களில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் பீன்ஸ் வகைகளில் 15.7 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது.
கீரைகள் : பச்சை காய்கறி வகைகளில் கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் முருங்கை கீரையில் அதிகப்படியாக இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் கீரையில் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
பீட்ரூட் : காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் இரும்புச்சத்தும் மற்றும் வைட்டமின் சி-யும் உள்ளது. 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லிகிராம் நிறைந்துள்ளது.
மீன் : மீன் வகைகளில் மத்தி மீனில் இருப்புசத்து உள்ளது. அதுவும் 100 கிராம் மத்தி மீனில் 2.9 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் இரும்பு மற்றுமின்றி ஒமேகா, கால்சியம், விட்டமின்களும் நிறைந்துள்ளது.
image 6
- - - - - - - - - Advertisement - - - - - - - - -