Thenmittai : கடையில் இனி வாங்க தேவையில்லை..வீட்டிலேயே தேன் மிட்டாய் செய்யலாம்!
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 1 கப், உளுத்தம் பருப்பு - 1/4 கப், தண்ணீர் - 1 கப் , சர்க்கரை - 1 கப் , சமையல் சோடா -1/4 தேக்கரண்டி, கேசரி பொடி , எண்ணெய் , எலுமிச்சை சாறு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் அரிசியையும், உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். அடுத்தது அரைத்த மாவில் தேவையான அளவு கேசரி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேர்த்து சர்க்கரை பாகாக தயார் செய்து கொள்ளவும். அடுத்தது சர்க்கரை பாகில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொறிப்பதற்கு முன்பு மாவில் சமையல் சோடா சேர்த்து மாவை சிறிது சிறிது உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த தேன் மிட்டாயை சர்க்கரை பாகில் சேர்த்து பத்து நிமிடம் எடுத்தால் சுவையான தேன்மிட்டாய் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -