Tips For Smelly Shoes : உங்கள் ஷூ கப்படிக்குதா..? அப்போ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..!
பள்ளி குழந்தைகள் மற்றும் அலுவலகங்கள் செல்லும் நபர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஷூக்களில் நாற்றம் வீசுவது, அதுவும் மழைக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். உங்கள் ஷூவில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்.
உங்கள் ஷூவினுள் பேக்கிங் சோடா பாக்கெட்டுகளை போட்டு வைத்தால் பாக்டீரியாக்கள் அழிந்து நாற்றம் வராது.
ஒரு காட்டன் பஞ்சை யூக்கலிப்டஸ் ஆயிலில் முக்கி அதனை ஷூ முழுவதும் துடைத்தெடுங்கள். பிறகு ஒரு பேப்பர் கொண்டு உங்கள் ஷூவை முடி வையுங்கள். இவ்வாறு இரவே செய்து வைத்திடுங்கள் . மறுநாள் உங்கள் ஷூ நாற்றம் வீசாமல் இருக்கும்.
உங்கள் ஷூவினுள் டீ பாக்கெட்டுகளை போட்டு வைப்பதாலும் நாற்றம் வீசாமல் இருக்கும்.
ஆரஞ்சி பழத்தோலை சாப்பிட்ட உடன் உங்கள் ஷூவினுள் போட்டு வைத்திடுங்கள், அதுவும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவும்.
ஷூ அணிவதற்கு முன் உங்கள் கால்களில் பேபி பௌடரை அடித்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் வியர்ப்பது குறைந்து துர்நாற்றம் கட்டுபடுத்த உதவுகிறது.
தினமும் ஒரே ஷூவை அணியாதீர்கள், இரண்டு ஷூக்களை மாற்றி மாற்றி பயன்படுத்துங்கள். தினமும் துவைத்த சாக்ஸை அணிவதும் அவசியமாகிறது.