மழைக்காலத்தில் பெட்ஷீட் துவைக்க சிரமமாக இருக்கிறதா..? அப்போ இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..!
குளிர்காலமாக இருந்தாலும் சரி மழைக்காலமாக இருந்தாலும் சரி துணி துவைத்து காய வைப்பது பெரிய சிரமம் ஆகிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதுவும் பெட்ஷீட், போர்வை போன்ற கனமான துணிகளை காய வைப்பது மிகவும் கடினமான வேலையாகிவிடும்.
உங்கள் பெட்ஷீட் வாஷிங் மெஷினில் துவைப்பதற்கு ஏற்றதானால் அதை மெஷினுள் போட்டு ஜெண்டில் ஆப்ஷனில் வைக்கவும், சில மெஷின்களில் டெலிகேட் என்று கூட குறிப்பிட்டிருக்கும்.
உங்கள் பெட்ஷீட் நன்றாக துவைத்து முடித்தப்பின் ஸ்பின்னர், ட்ரையர் ஆப்ஷனில் வைத்தால் மீதமுள்ள நீரும் முழுமையாக உறிஞ்சப்பட்டுவிடும்.
அதன் பிறகு சில மணி நேரங்கள் அவ்வப்போது வெயில் வரும்போது உலர்த்தி எடுத்தால் போதும்.
உங்கள் பெட்ஷீட்டின் எடை மெஷீனில் குறிப்பிடப்பட்டுள்ள எடையை தாண்டி இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -