Skin Aging : 30 வயசு ஆகிடுச்சா? உங்க சருமத்தை பளபளப்பா வைக்க சில சூப்பர் டிப்ஸ் இதோ..
வெளிப்புற சுற்றுச்சூழல் மாசு. மோசமான உணவுப் பழக்கவழக்கம், பணி நெருக்கடி என பல்வேறு அழுத்தங்கள் காரணமாக 40 தொடங்கும்போதே சருமம் மோசமாக டேமேஜ் ஆகிவிடுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவரவர் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாய்ஸ்சரைஸர்கள் பயன்படுத்தலாம்.
அதிகப்படியாக சூரிய ஒளியில் இருப்பது வயது ஏறும்போது சருமத்தை பாதிக்கும். அதனால் வெயிலில் கூடுதல் நேரம் இருக்கும் சூழல் உருவாகினால் சன் ஸ்க்ரீன் க்ரீம் மற்றும் லோஷன் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொருநாள் இரவும் முகத்தை நல்லதொரு க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்யலாம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி க்ளென்ஸருக்குப் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது.
மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறை. சரியான ஊட்டச்சத்து உடலுக்குச் செல்லாவிட்டால் நீங்கள் சோர்வாகவோ அல்லது நோயாளி போலவோ காட்சி அளிக்கக் கூடும்.
ஆகையால் சருமத்தைப் பாதுகாக்க நார்ச்சத்து, வைட்டமின், புரதம் நிறைந்த உணவை சாப்பிடலாம். இது 40 ஐ கடந்தவர்களுக்கு மடுமல்ல எல்லோருக்குமே உகந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -