Fitness Tips: தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
சரிவிகித உணவோடு சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அப்படியில்லை என்றாலும், தினமும் 10 நிமிடங்கள் நடப்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதினமும் 10 நிமிடங்கள் நடப்பது தூக்க பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்யும். ஆம். ஏதாவது இரு உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடு சீரான தூக்கத்திற்கு உதவும். மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது தசை வலுப்பெற உதவும். குறிப்பாக கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறும். எலும்பு ஆரோக்கியமாகவும் எலும்பு அடத்தி குறையாமலும் இருக்க உதவும். ஆற்றலை அதிகரிக்கும். டோபமைன் உற்பதிக்கு உதவும் என்பதால் எனர்ஜியுடன் இருக்க உதவும். என்ரோஃபின்ஸ் வெளியேறும் இது உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரும்.
தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடலில் கலோரிகளை குறைக்க உதவும். இதனால் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
செரிமான திறனை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். வாயு, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும். இதய ஆரோக்கியம் மேம்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -