Fertility Boosting Foods : கருவுறுதலின் வாய்ப்பை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
பால், கருவுறுதலை ஆதரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.மேலும் ஹார்மோன் சமநிலையை ஆதரிப்பதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்தலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெர்ரியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கரு முட்டைகளை பாதுகாக்கிறது. குறிப்பாக ஸ்ட்ராபெர்ரிகள் பெண்களின் லிபிடோவை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளத. இது ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்கலாம். இதில் உள்ள பொட்டாசியம், ஃபோலேட் கருவுறுதலுக்கு உதவலாம்.
பச்சை இலை காய்கறிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக கருவுறுவதற்கும் சிறந்து விளங்குகிறது. இதில் வைட்டமின் சி, ஈ, கே, மெக்னீசியம் போன்றவையும் உள்ளது. பச்சை இலைக் காய்கறிகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், செலினியம், ஃபோலிக் அமிலம், புரதம், நல்ல கொழுப்புகள் போன்றவை உள்ளன. இவை கருவுறுதலின் வாய்ப்பை அதிகரிக்க உதவும் சில முக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6 ,பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது கருவுறுதலுக்கு உதவலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -