Turmeric: மஞ்சள் தூளில் கலப்படம் இருக்குன்னு சந்தேகமா? கண்டறிவது எப்படி?இதோ டிப்ஸ்!
சமையலில் மஞ்சள் இடம்பெறாமல் இருக்காது.சுவை, நிறத்துக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சளை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.
மஞ்சளில் கலப்படம் செய்யப்படுதாக சொல்லப்படுகிறது. மஞ்சள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை எப்படி கண்டுப்பிடிக்காலம் என்பதை காணலாம. மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு தூள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகிறது. இவை உடல்ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றன
மஞ்சள் பொடி கலப்படம் அற்றதா என்பதை கண்டறிய சிறிதளவு மஞ்சள் தூளை கையின் உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும். 10 நிமிடங்கள் இப்படி செய்துவிட்டு பார்த்தால் கை மஞ்சள் நிறைத்தில் இருந்தால் அது ஒரிஜினல் மஞ்சள். கலப்படம் இல்லாதது என்று சொல்லப்படுகிறது.
ஒரு டம்பளில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் இரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறது நேரம் கழித்துப் பார்த்தால் மஞ்சள் தண்ணீருக்கு அடியில் தங்கிவிடும். அப்படியிர்ய்ந்தால் அது கலப்படம் அற்ற மஞ்சள் தூள் என்று அர்த்தகம். சில துகள்கள் மேலே மிதந்தால் அதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
தண்ணீரில் மஞ்சள் தூளை சேர்த்தால் அது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அது கலப்படம் செய்தாக இருக்க வாய்ப்பு அதிகம்.