தலைமுடி உதிர்வு பிரச்சனையா?கேரட் எண்ணெய் பயன்படுத்துங்க!ரெசிபி இதோ!
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கேரட் எண்ணெய் செய்முறை எளிதானது தான். ருவிய கேரட்- 2 கிண்ணம், தேங்காய் எண்ணெய் 2 கிண்ணம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App: கேரட்டுகளின் இரண்டு முனைகளையும் நறுக்கி விட்டு நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் அவற்றை பருத்தித் துணியைக் கொண்டு ஈரமில்லாமல் துடைக்க வும். பின்பு எல்லா கேரட்டுகளையும் துருவிக் கொள்ளவும். ஒரு அகன்ற வாணலியில் கேரட் துருவலைக் கொட்டி அத்துடன் சம அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கலக்கவும். 1
குறைவான தீயில் அவ்வப்போது இந்தக் கலவையை கிளறி விடவும். 15 நிமிடங்களில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது அடுப்பை அணைத்து விட்டு வாணலியை இறக்கி வைக்கவும். இந்தக் கலவை நன்றாக ஆறியபிறகு வடிகட்ட வும். இப்போது பொன்னிறமான கேரட் எண்ணெய் தயார். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வும்.
கேரட் எண்ணெய் தயாரிக்க நீங்கள் பயன்படுத்தும் வாணலி, கரண்டி, வடிகட்டி, கண்ணாடி பாட் டில் என எல்லா உபகரணங்களும் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக இருக்க வேண்டியது முக்கியம்.
தலைக்கு குளிக்கும் முன்பு கேரட் எண்ணெயை தலைப்பகுதியிலும், கூந்தலிலும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.கேரட் எண்ணெயை குளிர்சாத னப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம். வறட்சி நீங்கி கூந் தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக் கும். பொடுகு பிரச்னை நீங்கும் சருமப் பொலிவு அதிகரிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -