Pet Care: நீங்க சாப்பிடுற சாக்லேட்டையும் சிப்ஸையும் உங்க செல்ல நாய்க்கும் ஊட்டிவிடுறீங்களா! இதை படிங்க..
சரியான ஊட்டச்சத்து நாய்களின் நல்வாழ்விற்கு முக்கியமான காரணமாகும். அவற்றின் வயது, எடை, பாலினம், உயிரியல் அமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்து மாறுபடும் என்கிறார் பிரபல கால்நடை மருத்துவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉங்கள் செல்லப்பிராணியின் விருப்பத்திற்கேற்ப உணவை தேர்ந்தெடுக்கலாம். அவர்களின் உணவு தேவைகளை குறித்து உங்களின் கால்நடை மருத்துவரை அணுகி தெளிவு பெறலாம்.
கர்ப்ப காலம் அல்லது பாலூட்டும் தாய் நாய்களுக்கு ஊட்டச்சத்து அளவில் 1.5 முதல் 3 மடங்கு வரை தேவைப்படுகிறது. இது அவர்களின் வகை, அளவை பொறுத்து மாறுபடும்
நாய்குட்டிகளின் மூளை, எலும்புகள் வலுவாக வளர்ச்சி அடைய அதிகமாக புரோட்டீன், ஒமேகா 3 & 6 நிறைந்த உணவுகள் மற்றும் மீன் எண்ணெய் அவசியமானது. வளரும் நாய்குட்டிகளுக்கு 22% முதல் 32% வரை புரோட்டீன் தினசரி உணவில் தேவைப்படுகிறது.
செல்ல பிராணிகளுக்கு வெங்காயம், திராட்சை, காபி, டீ, உலர்ந்த பழங்கள், இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையை அதிகரிக்கும். மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்.
நாம் உண்ணும் சாக்லேட் , பிஸ்கட்களில் இனிப்பு இருப்பதால் அவை தீங்கு விளைவிக்கும் ஆதனால் அதை தவிர்க்க வேண்டும். கோதுமையில் கிளுடன் இருப்பதால் அது நாய்களுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். உப்பு மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.
உயிரியல் ரீதியாக செல்லப்பிராணிகளும் மனிதர்களும் வேறுபட்டவர்கள். அதனால் நாம் உண்ணும் உணவு அனைத்தையும் சாப்பிட இயலாது. இருப்பினும் மனிதனால் உண்ணக்கூடிய பொருட்களை வைத்து அவர்களுக்கான உணவை தயாரிக்கவேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -