Pregnancy Tips : கர்ப்ப காலத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?
கர்ப்பமாக உள்ள பெண்கள், பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) மீது கவனம் செலுத்த வேண்டும். BMI சீராக இல்லையென்றால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து நிறைத்த உணவுகளை சாப்பிட்டு முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம் சீராக இல்லையென்றால் ப்ரீ எக்லாம்ப்சியா, குழந்தை வளர்ச்சியில் சிக்கல், குறை பிரசவம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
உடலின் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தால், பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம். ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படலாம், கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்ப காலத்தில் போதுமான அளவு வைட்டமின் D கிடைக்காத காரணத்தால், ப்ரீ எக்லாம்ப்சியா, பிரசவ கால நீரிழுவு நோய், குறைப்பிரசவம் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின் ஆகியவை சீராக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.