Snacks recipe : வீக் எண்டிற்கு ஸ்நாக்ஸ் செய்யனுமா? காரசாரமான மேகி பேல் ரெசிபி இதோ!
தித்திக்கும் சாலை உணவு பிரியரா நீங்கள்? உங்களுக்கானது சுவையான சுலபமான மேகி பேல் ரெசிபி இதோ....
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : 2 மேகி பேக்கட்டுகள், வெண்ணெய், வேர்கடலை, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மேகி மசாலா, மிளகாய் தூள், உப்பு, தக்காளி சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ்.
செய்முறை : முதலில் மேகி பாக்கெட்டை உடைத்து மேகியை நொறுக்கி கொள்ளவும். பிறகு வேர் கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு நொறுக்கிய மேகியை வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதனுடன் வறுத்த வேர்கடலை, உப்பு, மிளகாய் தூள், மேகி மசாலா போட்டு கிளரி கொள்ளவும்.
அதன் பிறகு, வெங்காயம், தக்காளி, தக்காளி சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், கொத்தமல்லி சேர்த்து கிளரினால் சுவையான மேகி பேல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -