Unnakaya recipe : இஃப்தார் விருந்திற்கு ஸ்நாக்ஸ் ரெடி! மலபார் ஸ்பெஷல் உன்னக்கயா ரெசிபி இதோ..
இஃப்தார் விருந்திற்கு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே சுவையான சுலபமான மலபார் ஸ்பெஷல் உன்னக்கயா ரெசிபி உங்களுக்காகவே...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : வாழைப்பழம் 3, நெய், முந்திரி 10, உலர்ந்த திராட்சை 20, சர்க்கரை, துருவிய தேங்காய் 3/4 கப், ஏலக்காய் தூள், எண்ணெய்.
செய்முறை : முதலில் இட்லி குக்கரில் 3 வாழைப்பழங்களை வேக வைத்து தோள் உரித்து எடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு வேக வைத்த வாழைப்பழங்களை மசித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் துறுவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின், கையில் சிறிதளவு எண்ணெய் தடவி, மசித்த வாழைப்பழத்தை கையில் வைத்து தட்டையாக தட்டி வறுத்து வைத்த கலவையை உள்ளே வைத்து மறுபடி அதனை மூடி ஓரமாக வைத்து விட வேண்டும்.
இறுதியாக உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொறித்து பொன் நிறம் ஆன பின் வெளியே எடுத்து விட வேண்டும். அவ்வளவே..சுவையான உன்னக்கயா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -