Ela Ada Recipe : ஓணம் வந்தாச்சு..ஒரு சூப்பரான கேரள ஸ்டைல் இனிப்பு வகை செய்யலாமா?
ஓணம் பண்டிகை ஏற்கனவே கலைக்கட்ட தொடங்கி விட்டது. இந்த ஓணம் பண்டிகையை இன்னும் சிறப்பானதாக மாற்ற இந்த இலை அடை ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
தேங்காய் பூர்ணம் செய்ய: வெல்லம் - 200 கிராம், நெய் - 3 தேக்கரண்டி, துருவிய தேங்காய் - 1 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் இலை. அடை செய்ய: அரிசி மாவு - 1 கப், நெய் - 1 தேக்கரண்டி, வாழை இலை, உப்பு, தண்ணீர், தேங்காய் பூர்ணம்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைக்கவும். பிறகு கடாயில் நெய் ஊற்றி, தேங்காய் துருவல் போட்டு வறுக்கவும்.
தேங்காய் சிறிது நிறம் மாறியதும், இதில் வெல்லப்பாகு ஊற்றவும். அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஊற்றி கிளறவும். ஈரம் போகும் வரை கிண்டி, ஆறவைக்கவும்.
பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். அகல பாத்திரத்தில், அரிசி மாவு, நெய் மற்றும் கொதித்த வெந்நீர் சேர்த்து நன்றாக கிளறவும்.அடுத்து வாழையிலையில், மாவு உருண்டை வைத்து தட்டி நடுவில் தேங்காய் பூர்ணம் வைத்து, இலையை மூடவும்.
பிறகு இட்லி குக்கரில், தண்ணீர் சூடு செய்து, செய்த இலை அடையை வைக்கவும். பிறகு 15 நிமிடம் வேகவைத்தால் சுவையான இலை அடை தயார்.