Egg Drop Soup Recipe : கரகரப்பான தொண்டைக்கு இதமான முட்டை சூப்..செய்முறை விளக்கம் இதோ!
சிக்கன் சாறு தயாரிக்க தேவையான பொருட்கள் : சிக்கன் - 250 கிராம், பூண்டு - 4, வெங்காயம் - 1 நறுக்கியது, கேரட் - 2 நறுக்கியது, செலரி - 2 நறுக்கியது பிரியாணி இலை - 1, முழு மிளகு - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு ஏற்ப தண்ணீர் - 1.5 லிட்டர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூப் செய்ய இஞ்சி - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி முட்டை - 4,வெங்காயத்தாள் வெங்காயம் , உப்பு - தேவைக்கு ஏற்ப, மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப, வெங்காயத்தாள் பச்சை பாகம்
செய்முறை சிக்கன் ஸ்டாக் செய்ய, ஒரு அகல பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், பூண்டு பற்கள், கேரட், பெரிய வெங்காயம், செலரி, பிரியாணி இலை, உப்பு, முழு மிளகு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அடுத்து தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் பாத்திரத்தை மூடி ஒரு மணி நேரத்திற்கு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
ஒரு மணி நேரம் கழித்து பாத்திரத்திலுள்ள வெந்த சிக்கன் மற்றும் காய்கறிகளை வெளியே எடுத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் ஸ்டாக்கை வேகவைத்த பாத்திரத்திற்கு மாற்றி அதில் இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.
அடித்த முட்டையை கொதிக்கும் சிக்கன் ஸ்டாக்கில் மிக மெதுவாக ஊற்ற வேண்டும். முட்டையை ஊற்றும் பொழுது ஒரு கரண்டியால் கிளறிக்கொண்டே ஊற்றினால் முட்டை நூல் போல் இருக்கும். அடுத்து இதில் வெங்காயத்தாள் பச்சை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் முட்டை சூப் தயார். இதனுடன் உங்களுக்கு தேவையான அளவில் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -