Channa Dosa : புரதம் நிறைந்த கொண்டைக்கடலை தோசையை இன்றே செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : கொண்டக்கடலை - 1 கப் (250 மி.லி), பச்சரிசி - 1/2 கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தண்ணீர், உப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 /2 தேக்கரண்டி, நெய்
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும். மற்றோரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
பிறகு மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து மாவை கரைத்து கொள்ளவும். பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
தோசைக்கல்லை சூடு செய்து அரைத்த மாவில் சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும். சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
அவ்வளவு தான் சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்!