Egg Bread Toast:முட்டையும் பிரெட்டும் இருக்கா? ஊட்டச்சத்து மிகுந்த பிரேக்ஃபாஸ்ட் ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய 2 பூண்டு பற்களை சேர்த்து வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுருவிய 1 கேரட், துருவிய 1 உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ஒரு குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கனும்.
ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் முக்கால் ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்து கிளறி விட்டு, தக்காளி கெட்சப் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
மூன்று முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரட் துண்டின் ஓரங்களை அகற்றி விட்டும் சில பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரட் துண்டின் மேல் தயாரித்து வைத்துள்ள ஸ்டஃபை வைத்து அதை சற்று பரப்பி விட்டு அதன் மீது மற்றொறு பிரட் துண்வை வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.
ஒரு பேனில் எண்ணெய் அல்லது சீஸ் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பிரெட்டை முட்டையில் முக்கி எடுத்து பேனில் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான காலை உணவு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -