Weight loss Journey:இளநீர் உடல் எடையை குறைக்க உதவுமா? நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்!
கோடை வெயிலை சமாளிக்க உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு பழச்சாறு,இளநீர் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
இளநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா? என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் உமா தெரிவிக்கும் அறிவுரைகளை காணலாம்.
இளநீர் குடிப்பது மட்டும் உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார் உமா.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் ஹைட்ரேட் செய்யும் திறன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் இருக்க உதவுவது உள்ளிட்ட பலவற்றிற்கு இளநீர் குடிப்பது பயனளிக்கும்.
இதில் எலக்ட்ரோலைட் அதிகம் உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைப்பதை ஊக்கப்படுத்தும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -